மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
லண்டனில் சினிமா பயின்ற ரெக்ஸ்ராஜ் தலை கீழ் என்ற படத்தை இயக்கி வருகிறார். ராகேஷ், தேஜாமயி, நிவேதா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ஆதிஷ் உத்திரியின் இசை அமைக்கிறார். கே.டி.விமல் ஒளிப்பதிவு செய்கிறார். இது மாணவர்களைப் பற்றிய படம் என்கிறார் ரெக்ஸ்ராஜ். படத்தை பற்றி அவர் மேலும் கூறியதாவது:
வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதற்காக கிராமத்திலிருந்து மாணவர்கள் நகர்புறத்து கல்லூரிக்கு வருகிறார்கள். கட்டணம் என்ற பெயரில் கல்லூரி நிர்வாகம் பகல் கொள்ளை அடிக்கிறது. ராக்கிங் என்ற பெயரில் நகர்புறத்து மாணவர்கள் துன்புறுத்துகிறார்கள். தன்னை நேசிக்கும் மாணவிகளுக்கு சிக்கல்களை உண்டாக்குகிறார்கள். இந்த மூன்று பிரச்சினைகளையும் படத்தின் நாயகன் புதுமையான முறையில் தீர்க்கிறான். கல்வி கட்டணம், ராக்கிங்கை எதிர்த்து போராடுகிறான். அதில் அவன் வெற்றி பெற்றானா என்பதுதான் படத்தோட ஸ்டோரி. என்கிறார் ரெக்ஸ்ராஜ்.