புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் |
தல அஜித் பைக் பிரியர் என்பது நமக்கெல்லாம் தெரியும். அவரைப்போலவே இன்னொரு இளம் ஹீரோவுக்கும் பைக் என்றால் உயிர். படப்பிடிப்பு இல்லை என்றால் போதும், ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டு பைக்கை ஸ்டார்ட் பண்ணிவிடுவார். அலுக்கும்வரை ஊர் சுற்றிவிட்டு அப்புறம்தான் வீட்டுக்கு வருவாராம். அவர்..கௌதம் கார்த்திக். கடல் படத்தில் நடிகராக அறிமுகமாவதற்கு முன் ஜாலியாய் பைக்கில் நகர்வலம் வந்தாராம் கௌதம் கார்த்திக். நடிகரான பிறகு அப்படி வர முடியவில்லையாம். எனவே ஹெல்மெட் அணிந்து, முகத்தை மறைத்தபடி ஜாலி ரைட் அடிக்கிறார்.
இரண்டு தினங்களுக்கு முன் ஊட்டியிலிருந்து சென்னைக்கு பைக்கிலேயே வந்திருக்கிறார் கௌதம் கார்த்திக். என்னது...ஊட்டியிலிருந்து...சென்னைக்கு...பைக்கிலேயே...என்று வாயை திறக்காதீர்கள் ப்ளீஸ்...! இதொன்றும் கௌதம் கார்த்திக்குக்கு புதுசில்லை. ஏறக்குறைய இருபது தடவைக்கு மேல், சென்னையிலிருந்து ஊட்டிக்கும், ஊட்டியிலிருந்து சென்னைக்கும் பைக்கிலேயே பயணித்திருக்கிறாராம்.
அடேங்கப்பா..தம்பி ரியல் ஹீரோதான் போலிருக்கு!