விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
பீட்சா படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தற்போது சித்தார்த்தை வைத்து ஜிகர்தண்டா என்ற படத்தை இயக்கி வருகிறார். விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது.
பீட்சா படத்தை இயக்குவதற்கு முன் சில குறும்படங்களை இயக்கியவர் இவர்.
கார்த்திக் சுப்புராஜ் தற்போது ஸ்டோன் பென்ச் க்ரியேஷன்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார். இந்நிறுவனத்தின் மூலம் குறும்படங்களை உலக அளவில் மார்க்கெட்டிங் செய்வதோடு, சர்வதேச படவிழாக்களுக்கும் குறும்படங்களை அனுப்ப உதவிகளையும் செய்ய இருக்கிறாராம். அதுமட்டுமல்ல, பென்ச் காஸ்ட் என்ற நிறுவனத்தின் மூலம் படத்திற்குத்தேவையான நட்சத்திரங்களை தேர்வு செய்து கொடுக்கவும் திட்டமிட்டு இருக்கிறாராம். அதோடு பென்ச் வெப் என்ற பெயரில் திரைப்படங்களுக்கான வெப்சைட்டுகளை உருவாக்கிக் கொடுக்கவும் உள்ளாராம்.
இப்படி எல்லாம் கவனம் சிதறினால்...சினிமாவில் கிடைத்த வெற்றி நிலைக்குமா?