மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
காமெடி நடிகர் சந்தானம் முதன்முறையாக சோலோ ஹீரோவாக நடித்து வரும் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். தெலுங்கில் வெளியான மரியாதை ராமண்ணா படம் தான் தமிழில், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டுள்ளது. சந்தானத்துக்கு ஜோடியாக அஷ்னா சாவேரி நடிக்கிறார். ஸ்ரீநாத் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இருதினங்கள் மட்டுமே ஷூட்டிங் பாக்கி இருக்கிறது. மரியாதை ராமண்ணா படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி எடுக்கப்பட்ட இடமான கடப்பாவிலேயே, இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை படமாக்க உள்ளனர். இதற்காக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படக்குழு கடப்பா சென்றுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற ஏப்ரல் 14ம் தேதி, தமிழ் புத்தாண்டு அன்று மாலை 5 மணியளவில், சென்னை தேவி தியேட்டரில் நடக்கிறது. ஆடியோ வெளியீட்டு விழாவில் கூட சந்தானம் சென்ட்டிமெண்ட்டை கடைபிடிக்கிறார். அதாவது, ஏற்கனவே சந்தானம் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இங்கு தான் நடைபெற்றதாம். அந்தப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்ததால், சென்டிமெண்ட் கருதி வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவையும் தேவி தியேட்டரில் நடத்துகிறார் சந்தானம்.