மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கடந்த ஆண்டு இந்தியில் வெளியாகி பரபரப்பை கிளப்பிய படம் டி டே. ஸ்ருதிஹாசன் இதில் பாலியல் தொழிலாளியாக துணிச்சலுடன் நடித்திருந்தார். படத்தில் அவர் நடித்த காட்சிகளும், போட்டோக்களும் அதிர வைத்தது. ஸ்ருதியுடன் அர்ஜுன் ரம்பால், இர்பான் கான், ரிஷி கபூர், சந்தீப் குல்கர்னி, ஹியூமா குரேசி ஆகியோர் நடித்திருந்தனர். சங்கர் இஷான் லாய் இசை அமைத்திருந்தார். நிகில் அத்வானி டைரக்ட் செய்திருந்தார்.
இப்போது இந்தப் படத்தை தமிழில் தாவூத் என்ற பெயரில் டப் செய்து வெளியிட இருக்கிறார்கள். பிரண்ட்ஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனம் வெளியிடுகிறது. தமிழ்நாடு முழுவதும் வருகிற பிப்ரவரி 7ந் தேதி 150 தியேட்டர்களில் ரிலீசாகிறது. சர்வதேச பயங்கரவாதி ஒருவனை இந்தியாவின் முக்கியமான ரா அதிகாரி தனது டீமுடன் சென்று கைது செய்யும் ஆக்ஷன் கதை. அந்த தேடலிலும், ஆக்ஷனிலும் முக்கிய பங்கு வகிப்பது ஒரு பாலியல் தொழிலாளி. அந்த கேரக்டரில் ஸ்ருதி ஹாசன் நடித்திருக்கிறார்.