'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
தமிழ் சினிமாவில் தற்போது வாரிசுகளின் காலம். விஜய், சூர்யா, சிம்புவில் தொடங்கி கார்த்தி, விக்ரம் பிரபு, கெளதம் கார்த்திக், சண்முக பாண்டியன் உட்பட வாரிசுகள் பலரும் சினிமாவுக்கு வந்து கொண்டிருகின்றனர். இந்நிலையில் தன் எதார்த்த நடிப்பால் மறக்க முடியாத அளவில் மக்கள் மனதில் நின்றவர் தேங்காய் சீனிவாசன். அவருக்கு கீதா, சிவசங்கர், ராஜேஸ்வரி என்ற மகன், மகள்கள் உள்ளனர். சிவசங்கரின் மகன், ஆதித்யா ஷிவ் பிங்க் என்பவர் நடிக்க வர இருக்கிறார். இவர் சிறு வயதில் இருந்தே நடிக்க ஆசைப்பட்டிருக்கிறார். அவர் அம்மா பிங்கி படிப்புக்கு பிறகே நடிப்பு என்று உறுதியாக இருந்ததால், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பை முடித்து இப்போது சினிமாவுக்குள் வர இருக்கிறார். அதற்காக நடிப்பு பயிற்சி, டான்ஸ் என்று தன்னை தயார்படுத்தி கொண்டு வருகிறார். ஆளும் நன்றாக இருப்பதால் தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிப்பார் போல தெரிகிறது. ஸ்ரீ படத்தில் நடிகர் சூர்யாவுடன் ஜோடியாக நடித்த ஸ்ருதிகாவின் தம்பி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுமுகம் தேடும் இயக்குனர்களே கொஞ்சம் இவரை பாருங்கள்...!