மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இவன் வேற மாதிரி படத்தில், ஹீரோயின் சுரபியை பார்த்தவர்கள்,கோடம்பாக்கத்தின் மோனாலிசா என, அவரை கொண்டாடினார்கள். அந்த அளவுக்கு, அவரின் மென் சிரிப்பு, ரசிகர்களின் இதயங்களை சுண்டியிழுத்தது. அவருக்கு, இது, முதல் படம் என்றாலும், ரசிகர்களுக்கு, புதுமுக நடிகை என்ற நினைப்பு வராத அளவுக்கு, காதல் கலாட்டா காட்சிகளில், ஜாலியாக, வெளுத்து வாங்கியிருந்தார். ஆனாலும், அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லையே என, வருத்தப்படுகிறார், சுரபி.
கோலிவுட்டில், நானும் பெரிய நடிகையாக வேண்டும். சுரபி என்ற பெயரை, தமிழ் ரசிகர்களின் இதயங்களில், பெவிக்கால் போட்டு ஒட்ட வேண்டும். முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து, அனைவரின் பாராட்டையும் பெற வேண்டும் என, புத்தாண்டுக்கு, பல சபதங்களை செய்துள்ளார், சுரபி.