மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பிரபல மராத்தி நடிகை அல்கா புனீவர். மராத்தி சினிமாக்களில் குணசித்திர வேடங்களில் நடிப்பவர். கடந்த மாதம் (டிசம்பர்) 28ந் தேதி தானேயில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பிய அல்கா திடீரென மாயமானார். அவர் வீடு திரும்பாததை தொடர்ந்து அவரது உறவினர்கள் கோப்ரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். வட இந்திய மீடியாக்கள் அவரைப் பற்றிய செய்திகளை பரபரப்புடன் வெளியிட்டது.
இந்தநிலையில் அல்காவின் கார் டிரைவர் சென்னையில் இருப்பதை அறிந்த போலீசார் சென்னை வந்து அவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவல்படி அல்கா இருந்த இடத்தை போலீசார் கண்டுபிடித்து அவரை மீட்டனர். குடும்ப பிரச்னை காரணமாக அல்கா ஓடிவந்தாரா, அல்லது டிரைவர் அவரை கடத்தி வந்தாரா என்கிற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். அல்கா தங்கியிருந்த இடம் பற்றி போலீசார் தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர்.