மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நய்யாண்டி தொப்புள் சர்ச்சை நாயகியான நஸ்ரியாவின் மார்க்கெட் அதையடுத்து ஆட்டம் கண்டு விடும் என்றுதான் கருதப்பட்டது. ஆனால், சற்றே ஆடினாலும் மீண்டும் மார்க்கெட்டில் ஸ்டெடியாகி விட்டார் நஸ்ரியா. இதற்கு காரணம், அவருடன் நடித்த அத்தனை ஹீரோக்களுமே மீண்டும் மீண்டும் அவருடன் டூயட் பாட ஆசைப்படுவதுதான். அந்த அளவுக்கு ஒரே படத்தில் அவர்களுடன் டீப்பாக பழகி விடும் நஸ்ரியா, அதன்பிறகு தான் அவர்களிடம் சிபாரிசு கேட்காமலேயே அவர்களாகவே தனது பெயரை பரிந்துரை செய்யும் அளவுக்கு தனது அந்நியோன்யமான நட்பினால் அவர்களை ஈர்த்து விடுகிறாராம்.
அந்தவகையில், நேரம் படத்தில் நிவினுடன் அறிமுகமான நஸ்ரியா மீண்டும் அவருடன் ஓம் சாந்தி ஒசானா என்ற மலையாள படத்தில் மறுபடியும் நடித்து வருகிறார். அதேபோல் சலாலா மொபைல்ஸ் என்ற படத்தில் துல்கர்சல்மானுடன் நடித்து வருபவர், அடுத்தபடியாக வாய் மூடி பேசவும் என்ற படத்தில் நடிக்கிறார். தற்போது பகத் பாசிலுடன் ஒரு படத்தில் நடித்து வருபவர், அடுத்து களிமண்ணு இயக்குனர் பிளஸ்ஸி இயக்கும் படத்திலும் பகத்பாசிலுடன் இணைந்திருக்கிறார்.
மலையாளத்தில்தான் இந்த நிலை என்றால், தமிழிலும், ராஜாராணியில் ஜெய்யுடன் நடித்தவர், இப்போது திருமணம் என்னும் நிக்கா படத்தில் நடித்துள்ளார். மேலும், ராஜாராணிக்குப்பிறகு ஆர்யாவுடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறாராம். அந்த வகையில், தனுஷ் தவிர தான் நடித்த அனைத்து ஹீரோக்களுடனும் மீண்டும் டூயட் பாடி வருகிறார் நஸ்ரியா. கவர்ச்சி என்கிற ஆயுதத்தை கையிலெடுக்காமல் வெறும் திறமை என்பதை மட்டுமே மூலதனமாக முன்வைத்து நஸ்ரியா செல்லும் இந்த அதிரடி வேகத்தைப்பார்த்து மார்க்கெட்டில் இருக்கும் மற்ற ஹீரோயினிகள் கலங்கிப்போய் இருக்கிறார்கள்.