ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் |
இனியாவுக்கு தாய்மொழியான மலையாள படங்களில் நடிப்பதை விட, தமிழில் நடிப்பதில் தான் ஆர்வம் மிகுதியாம். நடிக்கும் படங்கள் தொடர் தோல்வியை தழுவியபோதும், 'தமிழ் சினிமா, கண்டிப்பாக ஒருநாள் என்னையும் முன்னணி நடிகையாக்கும் என்ற நம்பிக்கையில் தான், கோடம்பாக்கத்தில் முகாமிட்டுள்ளேன்' என்கிறார், அவர். அவரின் நம்பிக்கை வீண் போகவில்லை. விஷால் நடிக்கும், அடுத்த படத்தில் அவர், ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில், லட்சுமி மேனன் மட்டும் தான், முதலில் நாயகியாக ஒப்பந்தமாகியிருந்தார். கதையில் ஏற்பட்ட சில மாற்றம் காரணமாக, இப்போது இனியாவும் இப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.அவர் கூறுகையில், 'இந்த படத்துக்காக என்னிடம் கால்ஷீட் கேட்டபோது, சிறிய கேரக்டரில் நடிக்க அழைக்கிறார்களே என்று தயங்கினேன். ஆனால், முழுக் கதையையும் கேட்டபின் தான், லட்சுமி மேனனுக்கு இணையான வேடம் என, தெரிய வந்தது. அதனால், நடிக்க சம்மதம் தெரிவித்தேன் என்கிறார் இனியா.