விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
விஜயகாந்த் நடித்த, 'ரமணா' படம், பெரும் வெற்றி பெற்றது. மருத்துவமனைகளில் நடக்கும் சட்ட விரோத செயல்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது, அந்த படம். இப்போது, அந்த படத்தை, 'கப்பார்' என்ற பெயரில், இந்தியில் ரீ-மேக் செய்கின்றனர். அக் ஷய் குமார் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை, 'வானம்' படத்தை இயக்கிய கிரிஷ் இயக்குகிறார். இதில், சிம்ரன் நடித்த வேடத்தில் நடிக்க, தென்னிந்திய சாயலில் முக அமைப்பு கொண்ட நடிகையை தேடி வந்தனர். முதலில், ஸ்ருதி ஹாசனை ஒப்பந்தம் செய்து, போட்டோ செஷன் நடத்தினர். ஆனால், அவரது முகம் தென்னிந்திய சாயலில் இல்லை என, பின், அமலா பாலை அழைத்து மேக்கப் டெஸ்ட் நடத்தினர். இதனால், 'அசின் பாணியில் இந்தியை கலக்க வேண்டியது தான்' என்று உற்சாகத்தில் இருந்தார் அமலா பால்.ஆனால், திடீரென அவரையும் நிராகரித்த, 'கப்பார்' படக்குழு, மறுபடியும் ஸ்ருதி ஹாசனையே புக் செய்துள்ளனர். இந்தியில், ஸ்ருதியின் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதே, இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாம்.