மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மாஜி நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா. கே.வி.ஆனந்த் இயக்கிய,கோ படத்தில், ஜீவாவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமான இவர், அதையடுத்து, அன்னக்கொடி படத்தில் நடித்த போது, கோலிவுட்டில் முன்னணி நடிகையாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த படம் வெற்றி பெறாததால், கார்த்திகாவை ஓரங்கட்டியது கோடம்பாக்கம். இதனால், கார்த்திகாவுக்கு, திருமணம் செய்ய, அவரின் பெற்றோர் திட்டமிட்டுள்ளதாகவும், நடிப்புக்கு டாட்டா சொல்லப் போவதாகவும், வதந்திகள் பரவின. இந்த தகவலை, கார்த்திகாவின் தாயார் ராதா, கடுமையாக மறுத்தார்.
இந்நிலையில், தற்போது டீல் என்ற படத்தில் மட்டுமே, கமிட்டாகி நடித்து வந்த கார்த்திகா, ஆர்யா - விஜயசேதுபதி இணைந்து நடிக்கும், புறம்போக்கு படத்தில் இப்போது கமிட்டாகியுள்ளார். வழக்கமான கதாநாயகிகளில் இருந்து மாறுபட்டு, சமூக பார்வை கொண்ட ஒரு வித்தியாசமான நாயகியாக, இப்படத்தில் களமிறங்குகிறாராம் கார்த்திகா. இந்த வாய்ப்பால், கார்த்திகாவும், ராதாவும் உற்சாகமடைந்துள்ளனர். தமிழில், மீண்டும் ஒரு பெரிய ரவுண்டு வருவதற்கு, இந்த படம், தனக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என, நம்புகிறாராம், கார்த்திகா.