கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது |
கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கும் படம் துணை முதல்வர். கதை, திரைக்கதை வசனமும் அவரே எழுதியுள்ளார். ஆர்.விவேகானந்தன் என்பவர் டைரக்ட் செய்கிறார். இவர் ஏற்கெனவே மத்திய சென்னை என்ற படத்தை இயக்கியவர்.
கே.பாக்யராஜுக்கு ஜோடியாக ஸ்வேதா மேனன் நடிக்கிறார். இவர்களுடன் ஜெயராம் நடிக்கிறார். மீனாட்சி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். தி ஒலிம்பிக் மூவிஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் ஆர்.சங்கர், கே.ஜி.சுரேஷ்பாபு, ஆர்.சிவகுமார், கே.ஜி.பாஸ்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இதன் படப்பிடிப்பு இன்று (டிசம்பர் 12) ஏவிஎம் ஸ்டூடியோவில் பூஜையுடன் தொடங்கியது. ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். படத்தை குறுகிய காலத்தில் எடுத்து முடித்து வருகிற ஏப்ரலில் ரிலீஸ் பண்ண திட்டமிட்டிருக்கிறார்கள்.