விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
நவரச நாயகன் கார்த்திக் அவர் நடித்த காலகட்டத்தில் ரொமான்டிக் கதைகளில் புகுந்து விளையாடியவர். டயலாக் டெலிவரியில் வல்லவர். அதனால் அவருக்கென்று ஒரு பெரிய ரசிகர் வட்டமே இருந்தது. அதனால் தனது மகனையும் தன்னைப்போலவே ஒரு சிறந்த ரொமான்டிக் ஹீரோவாக சினிமாவில் நிறுத்த வேண்டும் என்ற ஆசை கார்த்திக்கிற்கு உள்ளதாம்.
அதன்காரணமாக, என்னமோ ஏதோ படத்தில் இரண்டு ஹீரோயினிகளுடன் நடிக்க கெளதம் பயப்படுகிறார் என்பதை அறிந்ததும். முறையான பயிற்சியை மகனுக்கு கொடுத்தாராம் கார்த்திக். அதனால் தன்னை விட சீனியர் நடிகைகளான நிகிதா பட்டேல், ரகுல் ப்ரீத்தி சிங் என்ற இரண்டு நடிகைகளுடனும் எப்படி ஈடுகொடுத்து நடிப்பது என்று முதலில் தயங்கிய கெளதம், அப்பா கொடுத்த ரொமான்டிக் அட்வைஸிற்கு பிறகு அசத்தலாக நடித்தாராம்.
அதனால் இந்த படம் மட்டுமின்றி, புதிதாக நான் நடித்து வரும் அத்தனை படங்களிலுமே எனது நடிப்பில் புதுமை தெரிகிற அளவுக்கு நடித்திருக்கிறேன். இப்படங்கள் திரைக்கு வரும்போது என் அப்பாவுக்கு சினிமாவில் ஒரு இடம் இருந்தது போல் எனக்கும் ஒரு இடம் கிடைத்து விடும் என்று சொல்லும் கவுதமுக்கு ரொமான்டிக் மட்டுமின்றி, ஆக்சன் கதைகளிலும் நடிக்கும் ஆர்வம் உள்ளதாம். அதற்கான நேரம் வரும்போது ஆக்சன் களத்திலும் கலந்துகட்டி அடிப்பாராம்.