விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
தமிழில் யுவன் யுவதி, படத்தில் நடித்த பிரபல மலையாள நடிகை ரீமா கலிங்கல் மலையாள இயக்குனர் ஆஷிக் அபுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ரீமா சினிமாவில் நடிக்க மாட்டார் ஆச்சாரமான ஆஷிக்கின் குடும்பம் அவர் சினிமாவில் நடிப்பதை அனுமதிக்காது என்ற பேச்சு மலையாள சினிமாவில் உள்ளது. இதனை ரீமா மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஆஷிக்கை நீண்ட நாள் காதலித்தேன், இப்போது கரம்பிடித்திருக்கிறேன். இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்திருக்கிறோம். குடும்பத்தினர் சம்மதத்திற்காக காத்திருந்து கல்யாணம் செய்து கொண்டோம். திருமணத்துக்குப் பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். அதற்கு ஆஷிக்கும் ஒப்புதல் தந்திருக்கிறார். அவரது குடும்பமும் அதற்கு தடை சொல்லவில்லை. சினிமாவில் நடிப்பது வேறு, சொந்த வாழ்க்கை வேறு இரண்டையும் கலக்க மாட்டேன். என்றார்.