Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மனைவியின் பாராட்டில் மகிழ்ந்து போன ஷாம்!

05 அக், 2013 - 11:00 IST
எழுத்தின் அளவு:

 12பி படத்தில் தனது சினிமா கேரியரை தொடங்கியவர் ஷாம். நடிக்க வந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டபோதும், இன்னமும் அவர் சாக்லேட் ஹீரோ அந்தஸ்திலேயே இருக்கிறார். அதோடு தமிழில் நடித்த படங்கள் தொடர் தோல்வியை கொடுக்கவே தெலுங்குக்கு சென்று வில்லனாக அவதரித்தார். ஆனபோதும் அவருக்கு அதில் திருப்தி இல்லை.

அதனால், மீண்டும் தமிழுக்கு வந்து 6 மெழுகுவர்த்திகள் என்ற படத்தை தானே தயாரித்து நடித்தார். அந்த படத்துக்காக 2 வருடங்களாக தனது உடம்பை வருத்தி நடித்திருந்தார் ஷாம். படமும் பேசப்பட்டது என்றபோதும் அவர் எதிர்பார்த்தபடி ரசிகர்களின் ஆதரவு பெரிய அளவில் கிடைக்கவில்லை. என்றாலும் திருப்தியாகவே இருக்கிறது என்கிறார் ஷாம்.

மேலும், இந்த படத்தில் ஷாமின் நடிப்பைப்பார்த்த அவரது மனைவி முதன்முறையாக மனதார பாராட்டியுள்ளாராம். அதோடு மீண்டும் சாக்லேட் ஹீரோ கதைகளில் நடிக்காமல் இதே மாதிரி நல்ல கதைகளாக தேடிப்பிடித்து நடியுங்கள். வருடத்துக்கு ஒரு படம் வந்தாலும் போதும் என்று கருத்து சொல்லியிருக்கிறாராம்.

மனைவியின் பாராட்டுதலோடு கூடிய கருத்தினையும் ஏற்றுக்கொண்டுள்ள ஷாம், இனி அழுத்தமான கதைகளில் மட்டுமே நடிப்பது என்று முடிவெடுத்திருக்கிறார். அதையடுத்து தன்னை புதிய கோணத்தில் வெளிப்படுத்தும் கதைகளுக்காக தினமொரு டைரக்டர் வீதம் தனது அலுவலகத்துக்கு வரவைத்து தீவிரமாக கதை கேட்டுக்கொண்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Venki Raja - mahalapye ,போஸ்ட்வானா
07 அக், 2013 - 08:50 Report Abuse
Venki Raja அருமையான படம் வாழ்த்துக்கள்
Rate this:
raja - erode  ( Posted via: Dinamalar Android App )
05 அக், 2013 - 15:24 Report Abuse
raja super acting,good luck sam
Rate this:
sakthi - cbe  ( Posted via: Dinamalar Android App )
05 அக், 2013 - 14:28 Report Abuse
sakthi சூப்பர் ணா
Rate this:
SYED USMAN SYED MUSTHAFA - kuala lumpur,மலேஷியா
05 அக், 2013 - 13:04 Report Abuse
SYED USMAN SYED MUSTHAFA ஷாம் நீங்கள் எதிர்பார்த்தபடி ரசிகர்களின் ஆதரவு பெரிய அளவில் கிடைத்திருக்கின்றது... தினமலர் டாப் 5-ல் உங்களின் படம் (6-மெழுகுவர்த்திகள்) முதலிடம் பிடித்திருக்கிறதே... அதற்கும் என் இனிய வாழ்த்துகள் மிஸ்டர் ஷாம்.........
Rate this:
mark - mumbai  ( Posted via: Dinamalar Windows App )
05 அக், 2013 - 12:44 Report Abuse
mark நடிக்கவே தெரியாமல் சூப்பர் பில்பட் பண்ணும் நடிகர்களை தயவுசெய்து நம்பாதீங்கோ அவனுங்க மொக்க படத்த பண்ணி மக்களை கொஞ்சம் கொஞ்சமாக கொன்னுகிட்டு இருக்கானுங்க ரசிகர்கள் நல்ல கதையம்சம் உள்ள படங்களுக்கு மட்டும் ஆதரவு அளித்தால் தலைவானுங்க திருந்துவானுங்க
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in