மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
"அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில், ஜோடி சேர்ந்து நடித்த போது தான், பிரசன்னா - சினேகாவுக்கிடையே காதல் மலர்ந்தது என்றாலும், அதை உடனடியாக வெளிப்படுத்தாமல், பல ஆண்டுகளுக்கு பின் பகிர்ந்து கொண்டு, திருமண வாழ்க்கையில் இணைந்தனர். திருமணத்துக்கு பின் வழக்கம் போல, கலைச் சேவையை தொடர்ந்துள்ள சினேகா, இப்போது , "உன் சமையல் அறையில், பண்ணையாரும் பத்மினியும் ஆகிய படங்களில், நாயகியாக நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து, கணவர் பிரசன்னாவுடனும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்கிறார் சினேகா. இவர்களை வைத்து, ஏற்கனவே, "அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தை இயக்கியவரே இந்த படத்தையும் இயக்குகிறார்.