விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தில் நாயகனாக அறிமுகமானவர் மாதவன். தமிழ் நடிகரான இவர் அதற்கு முன்னதாக சில இந்தி தொடர்களில் நடித்து வந்தார். ஆனால், மணிரத்னம் சினிமாவில் அறிமுகம் செய்த பிறகு இந்தியிலும் மாதவனுக்கு படவாய்ப்புகள் கிடைத்தன. தமிழில் ஒரு ரவுண்டு வந்தவர், பின்னர் த்ரீஇடியட்ஸ் உள்பட சில மெகா படங்களில் நடித்தார். இப்போதும் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், தற்போது ஒரு ஹாலிவுட் படத்திலும் நடிக்கிறாராம் மாதவன். 1968ல் ஹாலிவுட்டில் வெளியான நைட் ஆப் லிவ்விங்டெட் இப்போது 3டியில் ரீமேக் ஆகிறதாம். அதில், டானிடாட், கலோனா டால், டேனியல் ஹாரிஸ், டாம்ஸை ஸ்மோர் போன்ற ஹாலிவுட் நடிகர்களுடன் மாதவனும் ஒரு நாயகனாக நடிக்கிறாராம்.
இது மாதவன் நடிக்கும் முதல் ஹாலிவுட் படம் என்பதோடு, இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கும் நிறுவனம் உலக அளவில் வெளியிடப்போகிறதாம். அதனால் கோலிவுட்டில் எனது திரைப்பயணத்தைத் தொடங்கிய நான் பாலிவுட்டில் இருந்து இப்போது ஹாலிவுட்டுக்கே சென்றிருப்பது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. அப்படத்தில் ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையாக நடித்து இந்திய நடிகனுக்குள் இருக்கும் உலகத்தர நடிப்பை வெளிப்படுத்துவேன் என்று கூறியுள்ளார் மாதவன்.