மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இந்தியாவிலேயே அதிக படங்களை இயக்கியவர் ராமநாராயணன். (உலகத்திலேயே அதிகம் என்றும் சொல்கிறார்கள்) அவர் இதுவரை 125 படங்களை இயக்கி உள்ளார். தற்போது 126வது படமாக ஆர்யா சூர்யா என்ற படத்தை இயக்கி உள்ளார். 70 வயதை நெருங்கும் ராமநாராயணன் கடந்த சில மாதங்களாகவே சர்க்கரை நோய், மற்றும் ரத்த அழுத்த நோயால் அவதிப்பட்டு வருகிறார். அவரால் முன்புபோல் செயல்பட முடியில்லை. அதனால் தன் மகன் என்.ராமசாமியை தனது சினிமா வாரிசாக களத்தில் இறக்கி இருக்கிறார்.
ராமநாராயணனின் ஸ்ரீதேனாண்டாள் பிக்சர்ஸ் நிர்வாக பொறுப்புக்கு ராமசாமி வந்துள்ளார். தந்தை இயக்கிய ஆர்யா சூர்யாவின் தயாரிப்பாளராகி இருப்பதோடு, பசிபிக் ரிம் என்ற ஹாலிவுட் படத்தையும், யாருக்குத் தெரியும் என்ற தமிழ் படத்தையும் வாங்கி வெளியிடுகிறார். இதுவரை தந்தைக்கு உதவியாக இருந்த ராமசாமி இனி ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் புதுமுக இயக்குனர்கள், நடிகர்களுக்கு வாய்ப்பு வழங்க முடிவு செய்திருக்கிறார். தந்தையைபோல படம் இயக்குவது பற்றி இப்போது அவர் முடிவு எதுவும் செய்திருக்கவில்லை.