தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? | ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? | பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' | காமராஜாரை இழிவுபடுத்துகிறது: 'தேசிய தலைவர்' படத்திற்கு தடைகேட்டு வழக்கு | உருவக்கேலி வலிகளை ஏற்படுத்தும்: பிரீத்தி அஸ்ரானி |

விஜயின் கில்லி, சச்சின் படங்களுக்கு பின் குஷி இன்று ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. கில்லி, சச்சின் படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த படக்குழுவை குறிப்பாக, அந்த படங்களின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், எஸ்.தாணுவை சந்தித்தார் விஜய். இயக்குனர் தரணி, ஜான் மகேந்திரனிடம் படம் குறித்து விசாரித்தார். இப்போது குஷி ரீ ரிலீஸ் ஆகியிருப்பதால், அந்த படத்தின் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவை படம் ஹிட்டானால் விஜய் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யும், எஸ்.ஜே.சூர்யாவும் ஏனோ குஷிக்கு பின் இணையவில்லை. ஆனால், நண்பன், மெர்சல், வாரிசு படங்களில் இணைந்து நடித்தனர். இன்றும் விஜய்யை பாராட்டி பேட்டி அளித்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. அதனால், சந்திப்பு நடக்க வாய்ப்பு இருக்கிறது. அப்போது குஷி 2 குறித்து விஜயிடம் எஸ்.ஜே.சூர்யா சில விஷயங்களை பகிரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கில்லி, சச்சின் ரீ ரிலீஸ் ஆனபோது அந்த படங்களின் ஹீரோயின் திரிஷா, ஜெனிலியா ஆகியோர் படம் குறித்து பேசினார்கள். ஆனால், குஷி ரீ ரீலீஸ் குறித்து இன்றுவரை ஜோதிகா எதுவும் பேசவில்லை.