மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ் | 200 படங்களை கடந்த 2025 | ரிலீசுக்கு முன்பே லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த காந்தாரா சாப்டர் 1 | முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி | அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி | ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா : அரசியல் பேசப்படுமா? அடக்கி வாசிக்கப்படுமா? | சின்ன வயது கஷ்டங்களை சொல்லும் தனுஷ் | கிடா சண்டையை மையமாக கொண்டு உருவாகும் ஜாக்கி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அர்ச்சனா | பிளாஷ்பேக்: சினிமாவான முதல் உண்மை சம்பவம் |
96, மெய்யழகன் படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் பிரேம் குமார். 96 ஒரு வகையான காதல் படம் என்றால், மெய்யழகன் அதைவிட மற்றுமொரு யதார்த்த குடும்ப சூழல் கலந்த படம். இந்த இரண்டு படங்களுமே வரவேற்பை பெற்றன. இருப்பினும் மெய்யழகன் படத்தை சிலர் விமர்சித்தனர்.
பிரேம்குமார் அளித்த ஒரு பேட்டியில் மெய்யழகன் பற்றி கூறும்போது, ‛‛என்னிடம் சிலர் நீங்கள் மெய்யழகன் படத்தை தமிழில் எடுத்தது தவறு. ஒருவேளை மலையாளத்தில் எடுத்திருந்தால் இங்குள்ளவர்கள் அதை கொண்டாடியிருப்பார்கள் என தெரிவித்தனர். அப்படி அவர்கள் சொன்னது எனக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் அவர்கள் சொன்னுதும் ஒருவகையில் உண்மை தான். இங்கு சிலர் சொன்ன கருத்துக்களை ரசிகர்கள் சிலரும் பின்பற்றினர். இவர்கள் இப்படி ஏதாவது சொல்லி படத்தை அழிக்கணும் என நினைக்கிறார்கள். இருப்பினும் அந்த படத்திற்கான பாராட்டை நான் பெற்றுவிட்டேன். ஓடிடியில் பார்த்து பலரும் பாராட்டினார்கள்.
ஆனால் இங்கு சிலர் இருக்கிறார்கள். அவர்களை நான் விமர்சகர்கள் என்று கூட சொல்ல மாட்டேன். சினிமாவிற்கு பைரசி பெரிய பிரச்னையாக இருந்தது. அதை விட இவர்களை பார்த்தால் எனக்கு பயம் வருகிறது. இவர்களை நிறுத்தவே முடியாது. வருமானத்திற்காக படங்கள் பற்றி நெகட்டிவ்வாக பேசுகிறார்கள். ஆனால் சினிமாவில் இருப்பவர்கள் கேட்க வேண்டும். காரணம் இன்னைக்கு பட விழாக்களில் கொஞ்சம் பார்த்து பண்ணுங்க என சிலர் கெஞ்சுகிறார்கள். அப்படியெல்லாம் பண்ணக் கூடாது. சீனியர் இயக்குனர்கள் பற்றி கேவலமான கமென்ட் எல்லாம் பார்த்தேன். அவர்களுக்கு எல்லாம் மன ரீதியாக ஏதோ பாதிப்பு இருக்கு என்று நினைக்கிறேன். இதை யாரும் பேச மாட்டார்கள். ஆனால் நான் பேசுவேன். எனக்கு பயம் இல்லை.
இவ்வாறு தெரிவித்தார்.