2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

2025ம் ஆண்டில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது நான்கைந்து படங்களாவது வெளிவந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வாரங்களில் அதைவிட அதிகமான படங்களும் வெளிவருகிறது.
நேற்று, “காந்தி கண்ணாடி, மதராஸி, திறந்திடு கதவே திறந்திடு' ஆகிய நான்கு படங்கள் வெளியாகின. அவற்றுடன் சேர்த்து இந்த வருடம் வெளியான படங்களின் எண்ணிக்கை 180த் தொட்டுவிட்டது. இந்த மாதத்திலேயே அது 200ஐக் கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த வாரம் செப்டம்பர் 12ம் தேதி, “அந்த 7 நாட்கள், பிளாக்மெயில், பாம், தாவுத், குமாரசம்பவம், தணல், உருட்டு உருட்டு, யோலோ,” ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சில படங்களுக்கு இன்னும் தியேட்டர்கள் ஒப்பந்தம் முழுமையாக முடியவில்லை. அறிவித்தபடி அனைத்து படங்களுமே வெளியாகுமா அல்லது அவற்றில் ஒரு சில பின்வாங்குமா என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.
அடுத்த மாதம் அக்டோபர் 1ம் தேதி தனுஷ் நடித்த 'இட்லி கடை' படமும், பின்னர் தீபாவளிக்கு நான்கைந்து படங்களும் வெளியாக உள்ளது. அதனால், கிடைக்கும் இடைவெளியில் சிறிய படங்கள் வெளியாகும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இந்த வருடம் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 250ஐக் கடந்து புதிய சாதனை படைக்கப் போவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.