கமல்ஹாசன் தயாரிப்பில் பிரபுதேவா | 500 கோடி அறிவிப்பு, அப்புறம் பார்ட்டி, சொகுசு கார் உண்டா... | மீண்டும் கிசுகிசு : அர்ஜூன் தாஸ், ஐஸ்வர்ய லட்சுமி காதலா? | தெலுங்கு சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது… | ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் |
தக் லைப் படத்துக்குபின் ரஜினி, கமல் இணையும் படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறது ராஜ்கமல் நிறுவனம். அந்த படத்தின் பட்ஜெட், வேலைகள் அதிகம் என்பதால் பக்காவான முன்னேற்பாடுகள் நடக்கின்றன. இதற்கிடையில் பிரபுதேவா நடிக்கும் வெப்சீரியல் ஒன்றை இந்த நிறுவனம் சத்தமில்லாமல் தயாரித்து வருகிறதாம். இப்போது இரண்டு படங்களில் பிரபுதேவா நடித்து வருகிறார். சமீபகாலமாக அவருக்கான மார்க்கெட், பிஸினஸ் குறைந்துவிட்டதால், அவர் வெப்சீரியலுக்கு மாறியிருப்பதாக தகவல். காதலா காதலா படத்தில் கமலுடன் இணைந்து நடித்தவர் பிரபுதேவா. கமலின் பல ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்தவர் பிரபுதேவாவின் தந்தையான சுந்தரம் மாஸ்டர். அந்தவகையில் இருவர்களுக்கு இடையில் பல ஆண்டுகள் நட்பு உள்ளது.