சிம்பு கையால் பட பெட்டிகளில் ரூ 500 : டி.ஆர் சொன்ன புது தகவல் | கமல்ஹாசன் தயாரிப்பில் பிரபுதேவா | 500 கோடி அறிவிப்பு, அப்புறம் பார்ட்டி, சொகுசு கார் உண்டா... | மீண்டும் கிசுகிசு : அர்ஜூன் தாஸ், ஐஸ்வர்ய லட்சுமி காதலா? | தெலுங்கு சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது… | ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை |
‛உயிருள்ளவரை உஷா' ரீ-ரிலீஸ் பிரஸ்மீட்டில் சிம்பு பற்றி சில விஷயங்களை பேசியுள்ளார் டி.ராஜேந்தர். அவர் பேசுகையில் 'சிம்பு பிறப்பதற்கு முன்பே உயிருள்ளவரை உஷா வெளியாகிவிட்டது. இந்த படத்தின் மூலம் என் மனைவி தயாரிப்பாளர் ஆனார். படம் நல்ல லாபம். அதிலிருந்து அவர் என் பட தயாரிப்பாளராக அவர் இருக்கிறார். என் படங்களை ரீ ரிலீஸ் செய்யலாம் என்று முடிவெடுத்தபோது முதல் படமான ஒரு தலை ராகத்தை வெளியிட நினைத்தேன்.
சிம்புதாான் உயிருள்ளவரை உஷாவை வெளியிடுங்க என்றார். அந்த படத்தில் இடம் பெறும் கட் அடிப்போம் பாடல் மீது அவருக்கு அவ்வளவு ஆசை. அதை இப்போது ரீமிக்ஸ் செய்து இருக்கிறார். அடுத்து சிம்பு நடித்த இது நம்ம ஆளு, காதல் அழிவதில்லை படங்களை கூட ரீ ரிலீஸ் செய்யதிட்டமிட்டுள்ளோம். எனக்கு விஜயகாந்த்துக்கும் அரசியல் ரீதியாக பிரச்னை வந்தபோது சிம்புதான் பேசி சமாதானப்படுத்தினார். அதிலிருந்து அரசியல் காரணமாக, எந்த நடிகர் நட்பை முறிக்க கூடாது என முடிவு செய்தேன். எனக்கு உடல்நலம் சரியில்லாமல் போனபோது, இந்த மண்ணில்தான் எனக்கு எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைத்தேன். சிம்புதான் அமெரிக்க அழைத்து சென்று சிகிச்சை பெற வைத்தார்'' என்றார்.
சிம்பு திருமணம் குறித்து அவர் நேரடியாக பேசவில்லை. ஆனால், ''காதலுக்கு நான் எதிரி அல்ல என்று சொல்லிவிட்டு, அந்த காலத்தில் தன் படங்களின் பிலிமை தியேட்டருக்கு பெட்டிகளில் வைத்து அனுப்பும்போது அந்த பெட்டிக்குள் 500 ரூபாயை வைத்து அனுப்புவேன். அதை திறந்து பார்க்கும் ஆபரேட்டர் சந்தோசப்படுவார். படத்தை வாழ்த்துவார். பட பெட்டிகளில் சிம்பு கையால்தான் 500 ரூபாயை வைத்து அனுப்புவேன் என்றும் புது தகவல் சொன்னார்.