நான்கு நாளில் ரூ.404 கோடி வசூலைக் கடந்த கூலி | பிளாஷ்பேக்: வித்தியாசமான சிந்தனையோடு 'வீணை' எஸ் பாலசந்தர் தந்த விளையாட்டு “பொம்மை” | இன்ஸ்டாவில் பின்தொடரும் ஏ.ஆர்.ரஹ்மான் ; மகிழ்ச்சியில் மஞ்சும்மேல் பாய்ஸ் இசையமைப்பாளர் | 25 நாட்களைக் கடந்த 'தலைவன் தலைவி' | மாயமான கப்பலின் மர்மத்தை படமாக இயக்கும் ‛2018' பட இயக்குனர் | ஜூலையில் 1400 கோடி வசூல் கடந்த இந்திய சினிமா | மோதிரக் கையால் குட்டுப்பட்டு கதாநாயகியாக அறிமுகமாகும் மகேஷ்பாபுவின் சகோதரர் மகள் | ‛தி ராஜா சாப்' பட சம்பள பாக்கி விவகாரம் ; தயாரிப்பாளர் விளக்கம் | தொடர்ந்து ஆர்வத்தை தூண்டும் மம்முட்டியின் ‛கலம்காவல்' பட போஸ்டர்கள் | டாக்சிக் படத்தில் இணைந்த ருக்மணி வசந்த் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து, கடந்தவாரம் வெளியான படம் ‛கூலி'. அவருடன் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா, கன்னட நடிகர் உபேந்திரா, மலையாள நடிகர் சவுபின் சாகிர், ஹிந்தி நடிகர் அமீர்கான், தமிழில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், கன்னட நடிகை ரச்சிதா ராம் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக பெரிய படங்களை குறி வைத்து தாக்கப்படும் விமர்சனத்திற்கு இந்த படமும் தப்பவில்லை. அதேசமயம் படம் வெளியாகி முதல்நாளில் உலகளவில் ரூ.151 கோடி வசூலித்தது. அதன்பின் வசூல் நிலவரம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் 4 நாளில் இப்படம் ரூ.404 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாரநாட்கள் என்பதால் இனி வசூல் குறைவாகவே இருக்கும். அடுத்த சனி, ஞாயிறுக்கு படத்தின் வசூல் கொஞ்சம் அதிகமாகலாம்.