மீண்டும் இணைந்து நடிக்கப் போகும் ரஜினி, கமல்? | நான்கு நாளில் ரூ.404 கோடி வசூலைக் கடந்த கூலி | பிளாஷ்பேக்: வித்தியாசமான சிந்தனையோடு 'வீணை' எஸ் பாலசந்தர் தந்த விளையாட்டு “பொம்மை” | இன்ஸ்டாவில் பின்தொடரும் ஏ.ஆர்.ரஹ்மான் ; மகிழ்ச்சியில் மஞ்சும்மேல் பாய்ஸ் இசையமைப்பாளர் | 25 நாட்களைக் கடந்த 'தலைவன் தலைவி' | மாயமான கப்பலின் மர்மத்தை படமாக இயக்கும் ‛2018' பட இயக்குனர் | ஜூலையில் 1400 கோடி வசூல் கடந்த இந்திய சினிமா | மோதிரக் கையால் குட்டுப்பட்டு கதாநாயகியாக அறிமுகமாகும் மகேஷ்பாபுவின் சகோதரர் மகள் | ‛தி ராஜா சாப்' பட சம்பள பாக்கி விவகாரம் ; தயாரிப்பாளர் விளக்கம் | தொடர்ந்து ஆர்வத்தை தூண்டும் மம்முட்டியின் ‛கலம்காவல்' பட போஸ்டர்கள் |
தமிழ்த் திரையுலகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஒரு பரபரப்பு நிலவி வருகிறது. நீண்டகால நண்பர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்ற தகவல்தான் அந்த பரபரப்புக்குக் காரணம்.
'விக்ரம்' படத்தில் கமல்ஹாசனையும், 'கூலி' படத்தில் ரஜினிகாந்தையும் இயக்கிய லோகேஷ் கனகராஜ், அவர்கள் இருவரையும் இணைத்து நடிக்க வைத்து இயக்கப் போகிறாராம். இதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடந்ததாகவும் ஒரு தகவல். இந்தப் படத்தை கமல்ஹாசன் அவரது சொந்த படத் தயாரிப்பு நிறுவனம் சார்பாக தயாரிக்கப் போகிறாராம்.
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க, லோகேஷ் இயக்க ஒரு படம் உருவாகும் என்று சில வருடங்களுக்கு முன்பு ஒரு தகவல் வந்தது. ஆனால், அது நடக்கவில்லை. பின்னர்தான் கமல் நடிக்க 'விக்ரம்' படத்தை இயக்கினார் லோகேஷ்.
கார்த்தி நடிக்கும் 'கைதி 2' படத்தைத்தான் அடுத்து லோகேஷ் இயக்குவார் என்று சொல்லப்பட்டது. தற்போது அந்தத் தயாரிப்பாளரிடம் பேசி படத்தைத் தள்ளி வைத்துள்ளதாகவும், அதற்கு முன்பு ரஜினி, கமல் படத்தை லோகேஷ் இயக்கப் போகிறார் என்றும் சொல்கிறார்கள்.