தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
தரமணி, ஜெயிலர் படங்களில் நடித்த வசந்த் ரவியின் அடுத்த படம் இந்திரா. புதுமுக இயக்குனர் சபரீஷ் நந்தா இயக்கியுள்ளார். சீரியல் கொலை பின்னணியில் இந்த கதை உருவாகி உள்ளது. ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படமா என்றால், இல்லை. ஹீரோ கேரக்டர் பெயர் இந்திரன். அதனால், இந்த தலைப்பு.
கண்பார்வை பறி போன முன்னாள் போலீஸ் அதிகாரியாக ஹீரோ வருகிறார். அவர் எப்படி வில்லனை கண்டுபிடிக்கிறார் என்ற ரீதியில் கதை செல்கிறது. ராஜாவின் பார்வையிலே என்று தலைப்பு வைக்க நினைத்தோம். அது முடியாததால் இந்த தலைப்பு என்கிறார்கள்.
தெலுங்கில் பிரபல காமெடியன், இப்போது புஷ்பா வில்லன் புகழ் சுனிலுக்கு இதிலும் வில்லன். படம் குறித்து அவர் பேசுகையில், ‛‛நான் இந்த மாதிரி கேரக்டரில் நடித்தது இல்லை. ஏன் கேள்விப்பட்டதும் இல்லை. டப்பிங் பேசியபோது எனக்கே பயமாக இருந்தது. 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன், 1000 படங்களுக்கு மேல் பார்த்துள்ளேன். ஆனால் இது மாதிரியான ஒரு கதை பார்த்ததே இல்லை. இது ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்'' என்கிறார்.
மெஹ்ரீன் பிர்சாடா ஹீரோயினாக நடிக்கிறார், அஜித் மகளாக நடித்த அனிகாவுக்கு முக்கியமான வேடம். 1995ம் ஆண்டும் இந்திரா என்ற தலைப்பில் ஒரு படம் வந்தது. சுகாசினி இயக்க, அரவிந்த்சாமி, அனுஹாசன் நடித்து இருந்தனர்.