நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகி உள்ள 'சக்தித் திருமகன்' படம் நாளை மறுநாள் (19ம் தேதி) வெளிவருகிறது. 'அருவி' மற்றும் 'வாழ்' படங்களின் இயக்குநர் அருண் பிரபு இயக்கி உள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் துலேவைச் சேர்ந்த திரிப்தி ரவிந்திரா, இந்த படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகிறார்.
கணினி அறிவியலில் பட்டம் பெற்ற மென்பொருள் பொறியாளரான திரிப்தி, ஐந்து வருடங்கள் மேடை நாடக அனுபவம் பெற்ற பிறகு நடிப்புத் துறைக்குள் நுழைந்திருக்கிறார். ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
சக்தித் திருமகன் படத்தில் நடித்திருப்பது பற்றி அவர் கூறும்போது, “நான் நன்கு நடிப்பு பயிற்சி எடுத்துள்ளேன். மேடை நாடக அனுபவம் இருக்கிறது. தற்போது 'சக்தித் திருமகன்' படத்தில் இயக்குநர் அருண் பிரபு, விஜய் ஆண்டனி சார் மற்றும் படக்குழுவினருடன் பணிபுரிந்ததும் இந்தப் படம் மூலம் அறிமுகமாவதும் என் வாழ்வின் பெருமையான தருணம். இந்தப் படம் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன்.
தமிழ் கலாச்சாரத்தை மிகவும் நேசிக்கிறேன். முறையாக தமிழ் கற்று வருகிறேன். நடனம் கற்றிருக்கிறேன். ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான கதாபாத்திரங்கள் மற்றும் படங்களை கொடுக்கும் திறமையான இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்" என்கிறார்.