'உஸ்தாத் பகத் சிங்' விழாப் பேச்சு : மன்னிப்பு தெரிவித்த பார்த்திபன் | கோடையில் வெளி வர காத்திருக்கும் படங்கள் | பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் | ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு |

தனது மருமகன் அஜய் திஷானை வைத்து விஜய் ஆண்டனி தயாரித்துள்ள படம் 'பூக்கி'. 'சலீம்' படத்தின் ஒளிப்பதிவாளர் கணேஷ்சந்திரா இந்த படத்தின் மூலம் இயக்குனர் ஆகி இருக்கிறார். மருமகனை வைத்து 'மார்கன்' படத்துக்குபின் இந்த படத்தை ஏன் தயாரித்தேன் என்பது குறித்து விஜய் ஆண்டனி பேசியிருக்கிறார்.
அவர் கூறுகையில், ''இந்த பட இயக்குனரை நான் முதலில் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினேன் என்பதில் எனக்கு பெருமை. இன்று அவரை இயக்குனராக மீண்டும் அறிமுகப்படுத்துவது இன்னும் பெருமை. மலையாள சினிமா போல தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கும் முக்கியத்துவம் வர வேண்டும். அந்த வகையில் புதிய பரிதி ஒரு முக்கியமான எழுத்தாளர். இந்த படத்துக்கு பிறகு அவர் பெரிய இடத்திற்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது.
இந்த பட ஹீரோ அஜய் மிக நேர்மையான, உழைப்பாளி. முதலில் ஒரு நல்ல மனிதன். அதனால் தான் நல்ல நடிகனாகவும் பெரிய இடத்திற்கு வருவார். ஹீரோயின் மிகவும் புத்திசாலியான, திறமையான நடிகை. டயலாக் டெலிவரி, டப்பிங், நடிப்பு - எல்லாமே சிறப்பாக இருந்தது. இந்த படம் உங்களுக்கு நிறைய வாய்ப்புகளை கொண்டு வரும்.'' என்றார்.
மேலும் 'நுாறுசாமி' படத்திலும் அஜயின் நடிப்பையும் குறிப்பிட்டார். நடிகர் அஜய் திஷான் பேசுகையில், ''இந்த படம் எனக்கு ஒரு சாதாரண திரைப்படம் அல்ல. இது என் வாழ்க்கையில் கிடைத்த ஒரு பெரிய அனுபவம். நான் ஒருபோதும் நினைக்காத பல விஷயங்கள் இந்த படத்தின் மூலம் நடந்திருக்கிறது. விஜய்ஆண்டனி சாருக்கு நன்றி' என்றார். இதில் முக்கியமான வேடத்தில் நடித்துஇருக்கும் தெலுங்கு நடிகர் மோகன்பாபு மகள் லட்சுமிமஞ்சு, நான் நல்லா பாடுவேன். விஜய்ஆண்டனி என்னை பாட வைக்க வேண்டும் என்றார்.