100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'மக்காமிஷி' | தமிழ்நாடு தி பியுட்டி : சோபிதாவின் டூர் டைரி | தென்னிந்திய நடிகர் மீது தமன்னா குற்றச்சாட்டு | பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு |
ராஜேஷ் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், ரவி மோகன், பிரியங்கா மோகன் மற்றும் பலர் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த படம் 'பிரதர்'. படம் சரியாக ஓடவில்லை என்றாலும் படத்தில் இடம் பெற்ற 'மக்காமிஷி' பாடல் வெளியானதுமே ஹிட்டானது.
பால் டப்பா எழுதி டகால்டி-யுடன் இணைந்து பாடிய பாடல் இது. இன்றைய இளம் ரசிகர்களைக் கவர்ந்த பாடலாக அமைந்தது. தற்போது யு டியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே அதிகப் படங்களுக்கு இசையமைக்காமல் இருக்கிறார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். 2022ல் வெளிவந்த 'த லெஜண்ட்' படத்திற்குப் பிறகு அவர் இசையமைப்பில் இரண்டு வருட இடைவெளியில் வந்த படம் 'பிரதர்'.
ஹாரிஸ் இசையில் வெளிவந்த பாடல்களில் 5வது 100 மில்லியன் பாடல் இது. இதற்கு முன்பு அவரது இசையில் வெளிவந்த 'யான் - ஆத்தங்கரை', 'வாரணம் ஆயிரம் - அஞ்சல', 'அனேகன் - டங்காமாரி', 'என்னை அறிந்தால் - உனக்கென்ன வேணும் சொல்லு', ஆகிய பாடல்கள் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ஹாரிஸ் பாடல்கள்.