சாமியாரான பாலிவுட் நடிகை | இணை நாயகனான யோகி பாபு | தமிழில் வெளியாகும் 'சத்தா பச்சா' | கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு: 9 விருதுகளை அள்ளிய 'மஞ்சும்மல் பாய்ஸ்' | தெலுங்கில் படம் தயாரிக்கும் சமந்தா : தமிழை புறக்கணிப்பது ஏன் | பிளாஷ்பேக்: பெயரை மாற்றிக் கொண்டு தமிழுக்கு வந்த கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: திரைப்படமான சாண்டில்யன் கதை | மீண்டும் அதே வன்முறை, ரத்தம் : லோகோஷ் கனகராஜ், அருண்மாதேஸ்வரன் மாறவே மாட்டார்களா? | கமல்ஹாசன் 71வது பிறந்தநாள் கொண்டாட்டம் இருக்குதா? இல்லையா? | விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு |

சூர்யா, ஜோதிகா தம்பதியினர் தங்கள் வாரிசுகள் தியா, தேவ் பெயரில் தொடங்கிய பட நிறுவனம் 2டி என்டர்டெயின்மென்ட். இந்த கம்பெனி '36 வயதினிலே, பசங்க 2, மகளிர் மட்டும், 24, சூரரைப்போற்று, கடைக்குட்டி சிங்கம், மெய்யழகன்' உள்ளிட்ட 17  படங்களை தயாரித்தது. சில படங்கள் லாபத்தையும், சில படங்கள் ஏமாற்றத்தையும் தந்தன. 
இப்போது இந்த நிறுவனம் சார்பில் படங்கள் தயாரிக்கப்படுவது இல்லை. ஜோதிகா மும்பையில் இருப்பதாலும், சூர்யா நடிப்பில் பிசியாக இருப்பதாலும், சினிமா நிலவரம் மோசமாக இருப்பதாலும் 2டி நிறுவனம் படத்தயாரிப்பு பணிகளை நிறுத்தி வைத்துள்ளது என்று கூறப்படுகிறது. நல்ல கதை அமைந்தால் மீண்டும் படத்தயாரிப்பில் ஈடுபடும் என்கிறார்கள். 
பெரும்பாலும் இந்த நிறுவனம் சூர்யா, கார்த்தி, ஜோதிகா நடித்த படங்களை தயாரித்தது. இப்போது சினிமா பிசினஸ் நிலவரம் மோசமாக இருப்பதால் சொந்த நிறுவனத்தில் படம் தயாரித்து ரிஸ்க் எடுக்க வேண்டாம் என நினைக்கிறார்களாம்.