பெரிய பட்ஜெட் படங்களை தவிர்க்கும் கமல்ஹாசன் | 'யாதும் அறியான்' ஆடியோ உரிமையை கைப்பற்றிய சரிகம | டிரண்டிங்: ரீல் வீடியோவால் சீரழியும் தம்பதிகளின் கதை | 'கூலி'க்காக ஆடிய டி.ராஜேந்தர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் மாதவன் படம் | தமிழில் 'எப் 1': நாளை வெளிவருகிறது | பிளாஷ்பேக்: மார்க்கெட் இழந்ததால் வெளிவராத விஜயன் படம் | பிளாஷ்பேக்: சரஸ்வதி சபதம் உருவாக காரணமான 'கலாவதி' | கூலி படத்திலிருந்து 'சிக்கிட்டு' பாடல் வெளியீடு | போதை பொருள் வழக்கு : கிருஷ்ணாவிடம் போலீசார் விசாரணை |
ராம் பிலிம் பேக்டரி சார்பில் மீனாட்சி ஆனந்த் தயாரித்துள்ள படம் 'டிரண்டிங்'. சிவராஜ் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். கலையரசன், பிரியா லயா, பிரேம் குமார், பெசன்ட் ரவி, வித்யா போர்கியா, ஷிவன்யா, பிரியங்கா, கவுரி, பாலாஜி, தியாகராஜன், தயாளன் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசை அமைக்க, பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் ஜூலை 18ம் தேதி வெளிவருகிறது.
படம் பற்றி இயக்குனர் சிவராஜ் கூறும்போது "இன்றைய காலக்கட்டத்தில் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் அம்சங்களில் ஒன்று, சமூக வலைதளங்கள். இதன்மூலம் இளம் தம்பதிகள் பதிவிடும் ரீல்ஸ் வீடியோக்களால் ஏற்படும் பல்வேறு ஆபத்துகள் மற்றும் சந்திக்கும் பிரச்னைகளை மையப்படுத்தி, முழுநீள கமர்ஷியல் படமாக இதை இயக்கியுள்ளேன்.
ஆன்லைனில் மூழ்கியுள்ள தம்பதிகளை பற்றிய கதை கொண்ட இப்படம், 3 பேர் கோணத்தில் நகரும். பிரபல யூடியூபர்கள் வேடங்களில் கலையரசன், பிரியா லயா நடித்துள்ளனர். ஆன்லைனில் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, அந்த கேம் இறுதியில் அவர்களை எந்த பிரச்னையில் சிக்க வைக்கிறது என்பது திரைக்கதை" என்றார்.