'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள படம் 'குபேரா'. இப்படம் 3 மணி நேரம் 2 நிமிடம் ஓட உள்ளது. சமீப காலத்தில் படங்களின் நீளம் மிக அதிகமாக இருப்பதும் ரசிகர்களுக்கு ஒரு அழற்சியைத் தருகிறது.
இரண்டரை மணி நேரம் இருந்தால் ரசிப்பதற்கு சரியாக இருக்கும், அதற்கு மேல் ஓடும் படங்கள் பொறுமையை சோதிக்கிறது என்ற ஒரு கருத்தும் ரசிகர்களிடம் நிலவி வருகிறது.
இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் அதிக நேரம் ஓடும் படங்களாக 3 மணி நேரம் 34 நிமிடங்களுடன் 'தவமாய் தவமிருந்து (2005)', 3 மணி நேரம் 30 நிமிடங்களுடன் 'ஹே ராம் (2000)', 3 மணி நேரம் 8 நிமிடங்களுடன் 'நண்பன் (2021)', 3 மணி நேரம் 3 நிமிடங்களுடன் 'கோப்ரா (2022)' ஆகிய படங்கள் இருந்தன.
அவற்றிற்கடுத்து 3 மணி நேரம் 2 நிமிடங்களுடன் 'குபேரா' 5வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் படத்திற்கு முதலில் 3 மணிநேரம் 15 நிமிடங்கள் ஓடும் விதத்தில் சென்சார் வாங்கிருந்தார்கள். பின்னர் 13 நிமிடங்களைக் குறைத்துள்ளார்கள்.
படம் நன்றாக இருந்தால் நீளம் பெரிதாகத் தோன்றாது, மாறாக சரியில்லாமல் போனால் அது ரசிகர்களின் பொறுமையை சோதிப்பதாக அமையும்.