'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் | என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை |

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிரபலமாகிவிட்டவர் இசையமைப்பாளர் அனிருத். அவருக்கும் பிரிமியர் கிரிக்கெட் லீக் அணி ஒன்றின் பெண் உரிமையாளருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக சில நாட்களாக வதந்திகளும், செய்திகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.
இது குறித்து உடனடியாக எக்ஸ் தளத்தில் பதிவு போட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் அனிருத். “திருமணமா…. அமைதியாக இருங்கள் நண்பர்களே… வதந்திகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்” என பதிவிட்டுள்ளார்.
அனிருத் குறித்து இதற்கு முன்பு இப்படி ஏதாவது காதல், திருமண வதந்திகள் வருவதுண்டு. ஆனால், அவற்றைக் கடந்து போய்விடுவார். இந்த முறை அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
34 வயதாகியுள்ள அனிருத் இன்னும் 'பேச்சுலர்' ஆகவே இருக்கிறார். தற்போது 'கூலி, மதராஸி, லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி, ஜனநாயகன், ஜெயிலர் 2' ஆகிய தமிழ்ப் படங்களுக்கும், 'கிங்டம், மேஜிக், தி பாரடைஸ்' ஆகிய தெலுங்குப் படங்களுக்கும், 'கிங்' ஹிந்திப் படத்துக்கும் இசையமைத்து வருகிறார்.