சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் |

தமிழ் சினிமாவில் சமீபத்திய காலத்தில் டிராப் ஆன படங்களின் பட்டியலில் சூர்யாவின் படங்கள்தான் அதிகம் இருக்கும். அவருக்கு திருப்புமுனையும், நல்ல வெற்றியையும் பெற்றுத் தந்த இயக்குனர்களுடன் 'கருத்து வேறுபாடு' வந்து அறிவிக்கப்பட்ட படங்கள் 'டிராப்' ஆகியுள்ளன. அந்த வரிசையில் தற்போது 'வாடிவாசல்' படமும், அதன் இயக்குனர் வெற்றிமாறனும் இணைகிறார்களோ என்ற சந்தேகம் ஏறக்குறைய உறுதியாகிவிட்டது என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
இதற்கு முன்பு 'துருவ நட்சத்திரம் - கவுதம் மேனன்', 'அருவா - ஹரி', 'வணங்கான் - பாலா', 'புறநானூறு - சுதா கொங்கரா' ஆகிய படங்களும் இயக்குனர்களுடனும் சூர்யாவின் படம் அறிவிக்கப்பட்டு சில பல காரணங்களால் 'டிராப்' ஆனது. குறிப்பாக அந்தப் படங்களில் தொடர்ந்து பணி புரிய சூர்யா விரும்பவில்லை என்பதுதான் காரணம் என்றார்கள்.
'நந்தா' படம் மூலம் பாலா, 'காக்க காக்க' படம் மூலம் கவுதம் மேனன்', 'ஆறு' படம் மூலம் ஹரி, 'சூரரைப் போற்று' படம் மூலம் சுதா ஆகியோர் சூர்யாவிற்கு குறிப்பிடத்தக்க திருப்பத்தைத் தந்தார்கள்.
இப்போது 'வாடிவாசல்' படத்திற்காக வெற்றிமாறன் தந்த திரைக்கதையில் சூர்யா சில திருத்தங்களைச் சொல்லி இருக்கிறார். அடுத்து முழுமையான திரைக்கதை புத்தகத்தை வெற்றிமாறன் தரவேயில்லையாம். அதை தந்தால்தான் படப்பிடிப்பு நடத்துவது சரியாக இருக்கும் என சூர்யா கேட்டிருக்கிறார். வெற்றிமாறனுக்கு அந்த 'பவுண்டட் ஸ்கிரிப்ட்' என்பதை எழுதும் பழக்கமேயில்லையாம். இப்படியே போனால் சரியாக இருக்காது என சூர்யா ஒதுங்கிவிட்டார் என்கிறார்கள்.
அதற்குப் பதிலாக வேறொரு இயக்குனரைச் சொல்லுங்கள், உங்களது தயாரிப்பில் நடிக்கிறேன் என 'வாடிவாசல்' தயாரிப்பாளர் தாணுவிடமும் சூர்யா சொல்லிவிட்டாராம். வெற்றிமாறன் இயக்கத்தில் வேறொரு கதையில், வேறொரு நடிகர் தாணு தயாரிப்பில் நடிக்க உள்ளார் என்கிறார்கள்.
எந்தப் படத்தின் அறிவிப்பு முதலில் வரும் என்பது விரைவில் தெரிந்துவிடும்.