தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'கூலி' . இதில் அமீர் கான் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். நாகார்ஜூனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், சவுபின் சாகிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிரூத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தொடர்பான வேலைகள் நடக்கின்றன. ஆகஸ்ட் மாதம் பான் இந்தியா படமாக ரிலீஸாகிறது.
பொதுவாக ரஜினி படம் என்றால் தமிழகம் தாண்டி மற்ற தென்னிந்திய மற்றும் ஹிந்தியிலும் ஓரளவுக்கு வரவேற்பை பெறும். அந்தவகையில் இந்த படத்தில் பிறமொழி முன்னணி நடிகர்களும் நடித்துள்ளதால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. இதனால் இந்த படத்தை வாங்க போட்டா, போட்டியும் நடக்கிறது. முதற்கட்டமாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தியேட்டர் உரிமையை ரூ. 43 கோடிக்கு அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் மற்றும் சித்தாரா என்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் பெற கடுமையான போட்டி நடைபெற்று வருகிறதாம்.