தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
சமீபத்தில் மும்பையில் நடந்த குபேரா பட பிரமோஷன் நிகழ்ச்சியில் எனக்கு ஹிந்தி தெரியாது. ஆங்கிலமும் சரளமாக வராது என்ற ரீதியில் பேசியிருக்கிறார் தனுஷ். உண்மையில் அவருக்கு ஹிந்தி தெரியாதா? அல்லது நடிக்கிறாரா என்று அவர் தரப்பில் விசாரித்தால் ''சென்னை வட பழனியில் உள்ள தனியார் பள்ளியில் படித்தவர் தனுஷ். பள்ளிப்படிப்பை தாண்டாதவர். சின்ன வயதில் முறைப்படி ஹிந்தி படிக்கவில்லை. ஆனால், ஹிந்தியில் ஷமிதாப், ராஞ்சனா, அட்ரங்கிரே ஆகிய 3 படங்களில் நடித்து இருக்கிறார்.
இப்போது தேரே இஸ்க் மே என்ற படத்தில் நடித்து வருகிறார். அவர் நடித்த பல படங்கள் ஹிந்தியில் டப்பிங் ஆகி உள்ளது. ஆகவே, அவருக்கு ஓரளவு இந்தி தெரியும். நன்றாக பேசுவார், புரிந்து கொள்வார். ஆங்கிலமும் அப்படியே. ஆனால், மேடைகளில் சரளமாக பேச தயங்குவார். ஆகவே, அவருக்கு முழுமையாக ஹிந்தி தெரியாது என சொல்லலாம்.
குபேரா படத்தில் நடிக்கும் ராஷ்மிகாவுக்கு நன்றாக தமிழ் பேச தெரியும். இன்னொரு நடிகரான நாகார்ஜூனா சென்னையில் பிறந்து வளர்ந்தவர். ஆகவே. அவர் சரளமாக தமிழ் பேசுவார்'' என்கிறார்கள்.