சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
யு டியூப் தளங்களிலும், சமூக வலைதளங்களிலும் இடம் பெறும் பார்வைகள் (வியூஸ்), லைக்குகள் ஆகியவை உண்மை என இன்னும் சிலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். பணம் கொடுத்தால் அந்தப் பார்வைகளை அதிகப்படுத்தித் தருவார்கள், அதுதான் 'பெய்டு வியூஸ்'.
சில பல திரைப்படங்களின் டிரைலர்கள், டீசர்கள், பாடல்கள் என பலவற்றிற்கும் இப்படி பணம் கொடுத்து பொய்யான 'வியூஸ்'களைத் தயாரிப்பாளர்கள் பெறுவார்கள். அதன் மூலம் தங்களது படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது என அதை படத்தின் வியாபாரத்திற்கு பயன்படுத்திக் கொள்வார்கள்.
சமீப காலங்களில் பாசிட்டிவ்வான விமர்சனங்கள் எழுதுவதற்காக சில யு டியூப் விமர்சகர்களுக்கு பணம் கொடுப்பதும் உண்டு என்பது சமீபத்திய டிவி நிகழ்ச்சி ஒன்றில் விவாதிக்கப்பட்டு பரபரப்பானது.
அதற்கும் மேலாக சமூக வலைதளங்களில் அதிக பாலோயர்களை வைத்துள்ளவர்களை 'இன்புளுயன்சர்கள்' என்று அழைத்து, அவர்களைப் படங்களைப் பார்க்க வைத்து சில லட்சங்கள் வரை தந்து படங்களை 'புரமோஷன்' செய்ய வைப்பதும் டிரென்டாகிறது. அவர்களது பேச்சை நம்பி தியேட்டர்களுக்குப் படம் பார்க்கச் சென்று ஏமாந்து திரும்பியவர்களும் உண்டு.
இதனிடையே, விஜய் நடித்த 'வாரிசு' படத்தைத் தயாரித்த பிரபல தெலுங்குத் தயாரிப்பாளர் தில் ராஜு அவரது தயாரிப்பில் அடுத்த வர உள்ள 'தம்முடு' தெலுங்குப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இந்த 'பெய்டு வியூஸ்' குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
“இந்த 'தம்முடு' படத்திலிருந்து இதைத் தொடங்குகிறேன். இந்தப் படம் பெறும் அனைத்து பார்வைகளும் (வியூஸ்) முற்றிலும் உண்மையானவே. எனது பிஆர்ஓ மற்றும் அலுவலகத்திலும் பணம் கொடுத்து எதையும் பெற வேண்டாம் என கண்டிப்பாக சொல்லிவிட்டேன். இந்த அணுகுமுறை மூலம் எங்கள் படம் எவ்வளவு 'ரீச்' ஆகியுள்ளது என்பதை நாங்கள் உண்மையாக அறிய முடியும்.
'பெய்டு வியூஸ்' மூலம் அந்தப் படம் ரசிகர்களிடம் உண்மையான ஆர்வத்தைத் தூண்டியதா என்பதை ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாது. இதற்கேற்றபடி மாறுவது கடினம் தான் என்றாலும் இதுதான் முன்னோக்கிச் செல்லும் ஒரு வழி. ஊடகங்கள் நம்மை சிக்கலான ஒரு சூழலில் தள்ளுவதற்கான வாய்ப்புகளைத் தேடுகின்றன.
படம் நன்றாக இருந்தால் ரசிகர்கள் பார்க்கட்டும். எனவே, பொய்யான டிஜிட்டல் பார்வைகளை உருவாக்க வேண்டிய அவசியமில்லை,” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவிலும் ஒரு சில தயாரிப்பாளர்கள் வேண்டுமென்றே இப்படி பணம் கொடுத்து பார்வைகளை அதிகப்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே இருந்துள்ளது. தற்போது இவை அனைத்தும் பணம் கொடுத்து உருவாக்கப்படுவதுதான் என்பது ரசிகர்களுக்கும் புரிய ஆரம்பித்துள்ளது.
கூடுதல் பணம் இல்லாததால் இப்படியான பொய்ப் பிரசாரங்களால் பாதிக்கப்படும் நல்ல படங்களும் இருக்கின்றன. பொய்ப் பிரசாரங்களால் மோசமான சில படங்கள் கூட ஓடும் சூழ்நிலையை அவர்கள் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். இதனால், நல்ல படங்களுக்கு நன்மை கிடைக்க வாய்ப்புள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை.