மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? | போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் | இணையதள தேடல் : தீபிகா படுகோன் | உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி |
கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா மற்றும் பலர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் 'தக் லைப்'. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் ரசிகர்களை ஏமாற்றியுள்ளது. பட வெளியீட்டிற்கு முன்பாக இப்படத்தை ஓடிடி தளத்தில் எட்டு வாரங்களுக்குக் பிறகே வெளியிட உள்ளோம் என கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் வழக்கம் போல நான்கு வாரங்களில் ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தியேட்டர்களில் இந்த வாரம் வரையில் தாக்குப் பிடிக்குமா என்பதே சந்தேகம் என கூறுகிறார்கள். நான்கு வாரங்களுக்குப் பிறகு வெளியிட அனுமதி அளித்தால் ஓடிடி நிறுவனம் கூடுதலாக பணம் தர முன் வரலாம். அந்தத் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை தியேட்டர்காரர்கள் நஷ்டம் என கேட்டால் கூட கொடுத்துவிட வாய்ப்புள்ளது.
இப்படி சில பல தகவல்கள் படத்தைப் பற்றி ஓடிக் கொண்டிருக்கிறது. இது உண்மையா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.