துரந்தர் காட்சி : மன்னிப்பு கேட்ட மாதவன் | பிளாஷ்பேக் : திருமண வாழ்க்கை தோல்வியால் ஒளிப்பதிவாளரான விஜயலட்சுமி | பிளாஷ்பேக் : ஒரே படத்தின் லாபத்தில் ஸ்டூடியோ கட்டிய தயாரிப்பாளர் | குஷ்புவை தொடர்ந்து கணவர் சுந்தர் சியும் அரசியலில் களமிறக்கம் : மதுரை மத்தியில் போட்டி | ஒரு பில்லியன் பார்வைகளைப் பெற்ற முதல் டிரைலர் ; ஸ்படைர்மேன் : பிராண்ட் நியூ டே | 'காந்தாரா' கதாநாயகியை 'அன்பாலோ' செய்த ரிஷப் ஷெட்டி | ஜூலை மாதத்திற்குத் தள்ளிப் போன 'ஜனநாயகன்' ரிலீஸ்? | சமூக வலைத்தளங்களில் வைரலாகும் கியாரா அத்வானி | ராம் சரணின் 41வது பிறந்தநாளில் 10 லட்சம் நன்கொடை வழங்கிய சிரஞ்சீவி | அஜித் உடன் நடித்தது மறக்க முடியாத தருணம் என்கிறார் ரெஜினா |

பழம்பெரும் பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ். சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமான இவர் தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியில் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடி உள்ளார். பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
இசைத் துறையில் சாதித்தாலும் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது. பாடகராகவே சில மலையாள படங்களில் தோன்றிய அவர் 'அவன்' என்ற மலையாளப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அந்த படம் வரவேற்பை பெறவில்லை, பிறகு தனுஷ் நடித்த மாரி படத்தில் வில்லனாக நடித்தார். தொடர்ந்து வில்லன் வாய்ப்புகள் வந்ததால் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு 'படை வீரன்' என்ற படத்தில் நாயகனாக நடித்தார். அந்த படமும் பெரிதாக அவருக்கு உதவவில்லை. அதன் பிறகு 'சாலமன்' என்ற 3டி படத்தில் நடித்தார், பான் இந்தியா படமாக வெளியான இதுவும் சரியாக போகவில்லை.
இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பின் தற்போது ராம் இயக்கத்தில் 'பறந்து போ' படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இதில் அவர் நாயகன் மிர்ச்சி சிவாவின் நண்பராக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படமாவது விஜய் யேசுதாசுக்கு நல்லதொரு இடத்தை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.