கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா நடித்து திரைக்கு வந்துள்ள தக் லைப் படம் ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆனால் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்தை புகழ்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அந்த பதிவில், பெரும்பாலான காட்சிகளில் ஓஜி மணி சாரின் அதிர்வுகளை உணர்ந்தேன், ரசித்தேன். ரொம்பவே பிடித்திருந்தது தக்லைப். மணிரத்னம் சார் தி மாஸ்டர் ஆப் வின்டேஜ் கேங்ஸ்டர் ட்ராமாஸ். கமல்ஹாசன் சாரின் நடிப்பு வழக்கம்போல் நடிப்பில் ஒரு தலைசிறந்த வகுப்பாக இருந்தது. சிலம்பரசன் டி.ஆரின் திறமை மற்றும் முழு நடிகர்களின் நடிப்பும் அருமையாக இருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் படத்தில் மாயாஜாலமே செய்துள்ளார்கள் என்று தெரிவித்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.
தக் லைப் படம் மணிரத்னம் படம் மாதிரியே இல்லை. படத்தை நன்றாக சொதப்பி விட்டார்கள் என்று கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். இந்த நேரத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அந்த படத்தை புகழ்ந்து பதிவு போட்டிருப்பதும் சோசியல் மீடியாவில் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.