மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

இந்திய திரைப்படங்களில் பெரும்பாலும் சூப்பர் ஹீரோ கதை அம்சம் கொண்ட படங்கள் குறைவாகவே வெளியானாலும் அதில் எல்லாமே ஆண்கள் தான் சூப்பர் ஹீரோவாக நடித்து வந்தனர். பெண்கள் சூப்பர் ஹீரோயினாக நடித்திருக்கிறார்களா என்று பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை அப்படி எந்த படமும் இல்லை.
இந்த நிலையில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் அப்படி முதன்முறையாக சூப்பர் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெருமையையும் பெற்றுள்ளார். மலையாளத்தில் தற்போது உருவாகி வரும் லோகா சாப்டர் 1 ; சந்திரா என்கிற படத்தில் தான் சூப்பர் ஹீரோயின் அவதாரம் எடுத்திருக்கிறார். தற்போது வெளியாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கில் ஒரு சூப்பர் ஹீரோவுக்கான ஆடையுடன் காட்சியளிக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்.
கதாநாயகனாக பிரேமலு புகழ் நஸ்லேன் நடிக்க, துல்கர் சல்மானின் வே பாரர் பிலிம்ஸ் தயாரிக்கிறது. டோமினிக் அருண் இயக்குகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் அடுத்தடுத்த பாகங்களாகவும் தயாராகும் என்பது இதன் டைட்டிலை பார்க்கும்போது தெரிகிறது. சூப்பர் ஹீரோயின் கதை அம்சம் கொண்ட படம் என்றாலும் மலையாள நேட்டிவிட்டியுடன் இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.