அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து | பிளாஷ்பேக்: இளையராஜா கங்கை அமரன் இணைந்த படம் | பிளாஷ்பேக் : பாலிவுட்டை கலக்கிய வாசன் | 25வது நாளில் 'மார்கன்', சில நாட்களில் ஓடிடியில்… | பேதங்களை மறந்து திறமைக்கு வாய்ப்பளிக்கும் தமிழ் சினிமா: ஷில்பா மஞ்சுநாத் | பிளாஷ்பேக்: படச் சுருளை எரித்துவிடச் சொன்ன தணிக்கை அதிகாரி | பிளாஷ்பேக் : 2 தமிழ் படங்களில் மட்டும் நடித்த கன்னட முன்னணி நடிகை | சினிமாவில் ஜெயிக்க 25 ஆண்டுகளாக போராடுகிறேன் : உதயா உருக்கம் | வரிசையாக சரியும் வசூல் நிலவரம் : கூட்டுக்குழு அமைக்கப்படுமா? கூடி பேசுவார்களா? | ஆளே மாறிய அயோத்தி ப்ரீத்தி அஸ்ராணி |
தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது குழந்தைகளுக்கான பேண்டசி படத்தின் மூலம் அறிமுகமாகிறார் எஸ்.லதா. 'மரகதமலை' என்ற படத்தை தயாரித்து, கதை திரைக்கதை, வசனம், பாடலை எழுதி இயக்கவும் செய்கிறார்.
இப்படத்தில் மாஸ்டர் சஷாந்த், அரிமா, மஹித்ரா, கலைக்கோ நடிக்கும் இப்படத்தில் கதாநாயகனாக சந்தோஷ் பிரதாப், கதாநாயகியாக தீப்ஷிக்ஹா மற்றும் முதன்மை கதாபாத்திரத்தில் தம்பி ராமையா, ஜெகன், சம்பத் ராம், வில்லானாக டெம்பர் வம்சி மற்றும் பலர் நடித்துள்ளனர். எல்.வி.முத்துகணேஷ் இசை அமைக்கிறார், பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் லதா கூறியதாவது: ராஜா ராணி கதைகள் என்றால் எனக்கு கொள்ளை பிரியம். சின்ன வயதில் பாட்டி, அம்மா சொல்லும் கதைகள் பல கேட்டு வளர்ந்தேன். கேட்ட கதையோடு என் கற்பனையும் சேர்த்து என் குழந்தைகள் உட்பட யாரை பார்த்தாலும் கதை சொல்லி அசத்துவது என் வழக்கம். அது கால போக்கில் படம் எடுக்கும் ஆசையை தூண்டியது.
படம் எடுப்பதற்காக நிறைய கதைகள் கேட்டேன். நான் கதைகள் கேட்டு வருவதை பார்த்து, என்னம்மா, நீங்களே நல்ல கதை சொல்றீங்க.. நீங்களே உங்களுக்கு பிடிச்ச மாதிரி கதை ஏன் எழுத கூடாதுன்னு என் பிள்ளைங்க கேட்டாங்க.. அப்படி உருவானது தான் இந்த “மரகதமலை”. குழந்தைகளை கவரும் வகையில் பல குழந்தை நட்சத்திரங்கள் மற்றும் புலி, யானை, டிராகன், கொரில்லா, பாம்பு, குதிரை என படம் அட்டகாசமாக புதுமையான பேண்டசி டிராமாவாக உருவாகி வருகிறது.
18ம் நூற்றாண்டில் நடந்த கதையாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு “தடா” காட்டுப்பகுதியில் மிக பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு, மொத்தம் 40 நாட்கள் தொடர்ந்து படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் மற்ற பணிகள் நடந்து வருகிறது. விரைவில் தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். இவ்வாறு கூறினார்.