அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் |
கமல், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛தக் லைப்'. மணிரத்னம் இயக்க, ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதன் பாடல்கள், டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றன. நாளை(ஜுன் 5) பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என கமல் பேசியதால் கர்நாடகா மாநிலத்தில் இந்த படத்திற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அங்கு படத்தை வெளியிட தடை எழுந்த நிலையில் கமல் தரப்பு கோர்ட்டை நாடியது. கமல் மன்னிப்பு கேட்டால் படத்தை வெளியிடலாம் என நீதிபதி கூறிய நிலையில் கமல் மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக கர்நாடகாவில் இந்த பிரச்னை முடியும் வரை தக் லைப் படம் வெளியாகாது என அறிவித்துள்ளார்.
பொதுவாக பெரிய நடிகர்கள் படங்கள் வெளியாகும் போது அந்த படங்களின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கும். அதன்படி தக் லைப் படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கும்படி படக்குழு சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதை ஏற்று நாளை ஒரு நாள் மட்டும் இந்த படத்திற்கு 4 காட்சிகளுக்கு பதிலாக 5 காட்சிகள் நடத்தி கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. படத்தின் சிறப்பு காட்சி காலை 9 மணிக்கு துவங்குகிறது.