பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா | 50 பேர் ஆசீர்வாதத்தால் கிடைத்த வாய்ப்பு: நமிதா நெகிழ்ச்சி | ஜெய் படம் மூலம் தமிழுக்கு வரும் கன்னட நடிகை | ஆண்ட்ரியா படத்தின் காட்சிகளை மாற்ற நீதிமன்றம் உத்தரவு | ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
முன்னணி பாலிவுட் தொலைக்காட்சி தொடர் நடிகை அனிதா ஹசாந்தினி. 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ள இவர் 'நாகினி' தொடர் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். பாலிவுட்டில் 50க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ள அனிதா சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் என்பது பலருக்கு தெரியாது.
பாலிவுட்டில் அறிமுகமாகி இரண்டு படங்கள் நடித்த நிலையில் மூன்றாவதாக அவர் நடித்த படம் 'வருஷம் எல்லாம் வசந்தம்'. மனோஜ் பாரதிராஜா' குணால் நடித்த இந்த படத்தில் அனிதா நடித்திருந்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தை ரவிசங்கர் என்ற புதுமுகம் இயக்கினார். இந்தப் படத்திற்குப் பிறகு 'சாமுராய்' படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்தார்.
இந்தப் படங்களுக்குப் பிறகு பாலிவுட்டுக்கு சென்று விட்ட அனிதா நீண்ட இடைவெளிக்குப் பிறகு எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய 'சுக்கிரன்' படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் விஜய் சிறப்பு தோட்டத்தில் நடித்திருந்தார். கடைசியாக 2008ம் ஆண்டு வெளிவந்த 'நாயகன்' என்ற படத்தில் ஜேகே ரித்தீஷ் ஜோடியாக நடித்தார். அதன்பிறகு தமிழ் படங்கள் எதிலும் நடிக்கவில்லை.