'ஓஜி' வரவேற்பு: பிரியங்கா மோகன் தெரிவித்த நன்றி | ‛தி பாரடைஸ்' படத்திலிருந்து மோகன் பாபு பர்ஸ்ட் லுக் வெளியானது! | தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ‛நோ' சொன்ன ருக்மணி வசந்த்.. ‛எஸ்' சொன்ன கீர்த்தி சுரேஷ்! | இளவட்ட இயக்குனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகை | திகில் படத்தில் நடிக்க வேண்டும்: 'மதராஸி' அக்ஷய் கிருஷ்ணா ஆசை | அஜித் அளித்த வாழ்க்கை பாடம்: சிபி சந்திரன் சிலிர்ப்பு | 3 நாட்களில் 200 கோடி வசூலித்த 'ஓஜி' | விஜய் சேதுபதி படத் தலைப்பு அறிவிப்பு தள்ளிவைப்பு | நிவின்பாலியின் 'சர்வம் மாயா' ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் உதயம் என்ற படத்தில் அறிமுகமானவர் பிரணிதா. தொடர்ந்து சகுனி, மாஸ், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் என பல படங்களில் நடித்தார். 2021ல் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்ட பிரணிதா இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவானார். அடுத்து மலையாளம், கன்னடத்தில் தலா ஒரு படத்தில் நடித்தவர் தற்போது மீண்டும் சினிமாவில் மறு பிரவேசத்தை தொடங்கி இருக்கிறார். அதற்காக சோசியல் மீடியாவில் தன்னுடைய புதிய புகைப்படங்களை பகிர்ந்து வரும் அவர், தனது தாய்மொழியான கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு இயக்குனர்களையும் சந்தித்து புதிய படவேட்டையில் தீவிரமடைந்திருக்கிறார். இதற்காக பிரணிதாவின் புதிய ஆல்பத்தை கோலிவுட்டில் சுற்றலில் விட்டு இருக்கிறார்.