ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? |
பழம்பெரும் நடிகைகளில் அதிகம் அறியப்படாதவர் கே.மாலதி. 1926ம் ஆண்டு ஆந்திர மாநிலம் ஏலூரில் பிறந்தார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த இவர் 'பாதாள பைரவி' படத்தில் என்.டி. ராமராவுக்கு ஜோடியாக நடித்தார். கன்னட சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் ராஜ்குமாருடன் 'காளகஸ்தி மகாத்மியம்' என்ற படத்தில் நடித்தார். 'ராஜகுமாரி' படத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஜோடியாக நடித்தார். இப்படி மூன்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்த பிறகும் மாலதி ஏனோ அதிக படங்களில் நடிக்கவில்லை.
பாதாள பைரவி, நீதிபதி, யாருக்கு சொந்தம், ரத்னகுமார் போன்ற பல தமிழ் படங்களிலும் பாக்கியலக்ஷ்மி, ஸ்ரீ கலகஸ்தீஸ்வர மஹாத்யம், அம்மே எவரு, பெல்லி கானுகா, குணசுந்தரி கதா, பக்த போதனா போன்ற பல தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார்.1946ம் ஆண்டு வெளியான “ஸ்ரீ முருகன்” படத்தில் எம்.ஜி.ஆர் - மாலதி ஆடிய சிவ பார்வதி நாட்டிய நடனம் அன்றைய ரசிகர்களை மகிழ்வித்தது. இப்படத்தில் கதாநாயகியும் இவரே. குறுகிய காலத்திலேயே குணச்சித்திர வேடங்களில் நடித்த மாதத்தில் பின்னர் திரைப்படங்களில் இருந்து விலகினார்.