லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடித்து சில நாட்களுக்குப் முன்பு திரைக்கு வந்த படம் 'மாமன்'. இந்த படத்தை இன்னும் ரசிகர்களுக்கு கொண்டு சேர்ப்பதற்காக சூரி தமிழகத்தில் ஒரு சில முக்கியமான தியேட்டர்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களுடன் படத்தை பார்க்கிறார்.
அந்த வகையில் நேற்று 'மாமன்' படத்தை நெல்லையில் உள்ள பிரபலமான தியேட்டரில் சூரி ரசிகர்களுடன் படம் பார்த்து வெளிவரும் போது செய்தியாளர்களைச்
சந்தித்தார். அப்போது அவரிடம் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அழைப்பு வந்தால் நடிப்பீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சூரி கூறியதாவது, "இதுவரை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் கதை நல்லா இருக்கும் பட்சத்தில் எனக்கு சரியாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக வில்லன் கதாபாத்திரத்திலும் நடிப்பேன். பழைய இயக்குனர், புதிய இயக்குனர் என்று எந்தவொரு வித்தியாசமும் இல்லை. இன்றைக்கு புதிய இயக்குனர்கள் பல வெற்றி படங்களை தருகிறார்கள்" என தெரிவித்தார்.