சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சினிமாவில் பொறுமை அவசியம் ; நல்ல படங்களுக்காக காத்திருக்கிறேன்... : புதுமுகம் ஜீவிதா! | தம்பதிகளின் உறவுச் சிக்கலை பேசும் ‛மதர்' | சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்யப்பட்ட 'கூலி' | பிளாஷ்பேக் : நண்பருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த மோகன் |
நடிகர் விக்ரம் நடித்து கடைசியாக வெளியான 'வீர தீர சூரன் 2' படத்திற்கு பிறகு 'மண்டேலா, மாவீரன்' ஆகிய படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் புதிய படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கின்றார். இது விக்ரமின் 63வது படமாக உருவாகிறது.
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஸ்ரீ நிதி ஷெட்டி, பிரியங்கா மோகன் போன்ற நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து இப்போது 'தி கோட், லக்கி பாஸ்கர்' ஆகிய படங்களின் மூலம் பிரபலமான மீனாட்சி சவுத்ரி உடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இன்னும் கதாநாயகி யார் என்பதை உறுதி செய்யாமல் படக்குழு குழப்பத்தில் உள்ளனர்.