கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? |
சில உண்மை சம்பவங்களை படமாக எடுப்பார்கள். சில சம்பவங்கள் படங்களை பார்த்தும் உருவாகும். சில குற்றவாளிகள் தாங்கள் இந்த படத்தை பார்த்துதான் இப்படி செய்தோம் என்று கூறுவது வழக்கமாக நடந்து வருகிறது. இதில் முக்கியமானது 100வது நாள் படம்.
இந்த படத்தில் கொலை செய்து பிணத்தை சுவரில் மறைத்து வைப்பது பார்த்துதான் தானும் கொலை செய்து பிணத்தை மறைத்து வைத்ததாக பின்னாளில் தூக்கிலிடப்பட்ட ஆட்டோ சங்கர் கூறினான்.
100வது நாள் படம் 1984ம் ஆண்டு வெளிவந்தது. இந்த படம் 'செட் நோட் இன் நீரோவின்' என்ற இத்தாலிய படத்தின் அப்பட்டமான காப்பி. தனது குரு பாரதிராஜா எடுத்த 'சிகப்பு ரோஜாக்கள்' படம் போன்று தானும் எடுக்க விரும்பிய மணிவண்ணன் இயக்கிய படம். இதில் விஜயகாந்த், மோகன், நளினி, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
படத்தின் நாயகி நளினிக்கு சிலர் கொல்லப்படுவது போன்ற முன்னறிவிப்பு வரும். மறுநாள் அது நடக்கும். அவளுக்கு முன்னறிவிப்பு செய்வது யார்? கொலை செய்வது யார், கொலை செய்யப்படுவது யார் என்பதுதான் படத்தின் கதை.
தமிழில் பெரிய வெற்றி பெற்று மலையாளத்தில் ஆயிரம் கண்ணுகள் (1986) என்ற பெயரிலும், ஹிந்தியில் 100 டேஸ் (1991) என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்படம், குறைந்த செலவில், பன்னிரண்டு நாட்களில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.